அதிமுகவில் பிளவு ஏற்படாது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டம்

 


அதிமுகவில் பிளவு ஏற்படாது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் வருகிற 15 ஆம் தேதி 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ள இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுக்கு பொது எதிரி திமுக தான் என்றார்.

அதிமுக கூட்டங்களில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவினருக்கு ஒவ்வொரு பந்தினையும் கவனமாக வீச வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்

எதிர்கட்சிகள் பேச முடியாத படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவிப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், கொட்டுகின்ற தேளுக்கு கூட உதவிடும் வகையில் அதிமுக உள்ளது என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகராசி கொண்டவர் மட்டுமல்ல மழைராசி கொண்டவர் என்று அவர் கூறினார். தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒவ்வொரு பந்தினையும் கவனமாக வீச வேண்டும் என்று அவர் தொண்டர்களை கேட்டுக் கொண்டார்