பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு உதவும் "தோழி திட்டம்"
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் வகையில் தோழி திட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திலிருந்தும் 2 பெண் போலீசார் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கான ஒரு நாள் பயிற்சியினை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று துவங்கி வைத்தார்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்பதை விளக்கும் குறும்படமும் வெளியிடப்பட்டது.