கிணத்தை காணவில்லை என பல புகார்கள் வருகின்றன... இனி கவலை வேண்டாம்... - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

 


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 23ஆம் தேதி டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை சென்னை மாநகராட்சி சார்பில் துவக்கிவைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சென்னையின் ஒட்டுமொத்த பகுதியும் எளிமையாக விரல் நுனியில் கொண்டு வரமுடியும். சென்னையின் சாலைகள் துவங்கி பூமிக்கடியில் செல்லும் போன் வயர் வரை நம்மால் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து கொண்டே நேரில் பார்க்க முடியும். அந்த வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி விரிவடைந்துள்ளது.


குறிப்பாக ஸ்மார்ட் சிட்டியின் கீழ் சென்னை தி.நகர் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள சாலைகள், கடைகள், ஆக்கிரமிபுகள், நீர்நிலைகள், கழிவு நீர் தொட்டிகள் என அனைத்தையும் டிஜிட்டல் மேப்பிங் முறையில் பதிவு செய்து கொள்ள முடியும். பிறகு பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் மேப்பில் எப்பொழுதெல்லாம் ஒரு புதிய திட்டம் இருக்கிறதோ அதற்கு ஒரே அறையில் அமர்ந்து கொண்டு அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதைப் போலவும் அந்த திட்டத்திற்கான துல்லிய மதிப்பீட்டை கணக்கீடு செய்யவும் இந்த புதிய டிஜிட்டல் மேப்பிங் பயன்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், “ சென்னை முழுவதும் டிஜிட்டல் மேப்பிங்  கொண்டுவரப்பட்டு எத்தனை மரங்கள் உள்ளன, எத்தனை மின்சார வழித்தடங்கள் உள்ளன, எந்த இடத்தில் பார்க்கிங் வசதி தேவை, எங்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என அனைத்தும் நம்மால் டிஜிட்டல் முறையில் கண்டுகொள்ள முடியும். 

அதைவிட முக்கியமாக சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீட்டினரும் சொத்து வரி கட்டி விட்டார்களா? இல்லையா? அவர்கள் கட்டக்கூடிய சொத்தின் மதிப்பு சரியானதாக இருக்கிறதா? கூடுதலாக ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்பதை நம்மால் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்” என்றர்.

மேலும், “ஒரு பகுதியில் சாலை அமைக்கப்பட்டால் அதில் திட்டம் முழுமையாக நிறையவேற்றபடுகிறதா என பார்க்க முடியும்.   துல்லியமாக எத்தனை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை போட்டிருக்கிறது என்பதுவரை நம்மால்  காண முடியும்.

சென்னையின்  மிக முக்கியமான பிரச்சினை டிராபிக்தான். இதில்  13 லட்சம் கார்கள் 54 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளது. வளரும் நகருக்கு பெருமையான ஒன்றாக இருந்தாலும் கூட வாகனம் அனைத்திற்கும் பார்க்கிங் செய்யும் வசதி மிகப்பெரிய சவாலாகும்.
எனவே மல்டி லெவல் பார்க்கிங் சாலையோர பார்க்கிங் என பல விதமாக நாம் திட்டமிட்டு வருகிறோம். அதற்கு டிஜிட்டல் மேப்பிங் பயன்படுகிறது” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வடிவேலு சினிமாவில் கிணற்றை காணவில்லை என்பதைப்போல பல புகார்கள் நமக்கு வருகின்றன. அதை எல்லாம் இனி துல்லியமாக கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால் ஆக்கிரமிப்பு இருக்கும் இடங்களை எப்படியும் மீட்டு எடுப்போம். ஏனெனில் வருவாய்த்துறையில் இருக்கக்கூடிய அந்த தகவல்கள் மாறவேமாறாது. 

எனவே ஆக்கிரமிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் அகற்றப்படும் அதை நாம் கண்காணித்து வருகிறோம். அரசு சொத்து என்பது  சிவன் சொத்து போல அந்த வகையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ள பகுதிகளை இதன் மூலம் கண்டறிந்து அகற்ற முடியும்” என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு