மாவட்ட செயலாளர்களுடன் சசிகலா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

 


சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, பெங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் நிறைவடையும் தருவாயில் சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று குணமானதும் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து சென்னை திரும்பினார். இந்நிலையில் அமமுக மாவட்ட செயலாளர்களுடன் சசிகலா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 234 தொகுதிகளிலும் அமமுக தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதிமுக, திமுக-விற்கு எந்த விதமான சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் என்பது பற்றியும் விரிவாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிமுக - அமமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடியுமா என்பது குறித்தும் சசிகலா கேட்டறிய உள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அளிக்கும் தகவல்களை பொறுத்தே அதிமுக - அமமுக இணைப்பு பற்றி சசிகலா முக்கிய முடிவெடுக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)