’தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற தீயாகவரும்...’ - சசிகலாவுக்கு ஆதரவாக தேனியில் போஸ்டர்

 தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் 5 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா விடுதலையானதை வரவேற்று அதிமுக பிரமுகர்கள் சிலர், தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்தவரிசையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில் "எங்கள் குலசாமியே, தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற தீயாகவரும் தியாக தலைவி சின்னம்மா வருக... வருக" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரவேற்பு பேஸ்டர்கள் பெரியகுளம் மட்டுமல்லாது தேனி நகர்ப்பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் துவங்கி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சசிகலா வரவேற்பு போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா