வாரத்தில் 6 நாள் வகுப்பு; கல்லூரிகளுக்கு உத்தரவு

 


சென்னை: அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகளை நடத்த, உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, தமிழக உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்த அரசாணை:கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் அனைத்தும், 2020 மார்ச், 25 முதல் மூடப்பட்டிருந்தன. 

இதையடுத்து, முதுநிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும், டிச., 2ல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன.பின், அனைத்து கல்லுாரிகளிலும், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகளை நடத்த, டிச., 7 முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அனைத்து வகை இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமா படிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு, நாளை மறுதினம் முதல், வகுப்புகள் துவக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

விதிமுறைகள்இதை பின்பற்றி, அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்கள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், நாளை மறுதினம் முதல், வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். பாடத்திட்டம் மற்றும் செய்முறை வகுப்புகளை முடிக்கும் வகையில், திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.இந்த கல்வியாண்டு முழுதும் இந்த முறையை பின்பற்றி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, கல்லுாரிகளை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)