கைப்பையில் 30 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம்: உரியவரிடம் ஒப்படைத்த சலவை தொழிலாளிக்கு பாராட்டு

 


சேலம் மாநகரம் சீலநாய்க்கன்பட்டியைச் சார்ந்தவர் சுகுமார். 70 வயதான இவர் ஒரு மர வியாபாரி. இவருடைய மனைவி பாக்கியம், வயது 63. சுகுமாரும் இவருடைய மனைவி பாக்கியமும் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் கடந்த 23ஆம் தேதி இவர்களின் உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளனர். அப்போது  தங்களுடைய கைப்பையில் 30 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய்  ரொக்க பணம் ஆகியவற்றை தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளனர்.

சீலநாய்க்கன்பட்டி ரவுண்டான தாண்டிய பிறகு தங்களிடம் இருந்த பையை தவறவிட்டதை உணர்ந்து அதிர்ச்சியுற்றனர். சிறிது தூரம் வந்த வழியாக திரும்பி சென்று தேடிப்பார்த்தும் நகை மற்றும் பணத்துடன் காணாமல் போன பை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். பின்னார் வயதான இந்த தம்பதியினர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் சீலநாய்க்கன்பட்டி பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்ய தொடங்கினர்.
இதனிடையே கெஜ்ஜல்நாய்க்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு போன் செய்து, ரமேஷ் என்ற சலவை தொழிலாளி சாலையில் கிடந்த பை ஒன்றை உரியவரிடம் ஒப்படைக்க உள்ளார் என்றும்,  அதில் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் உள்ளது என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.  உடனடியாக அன்னதானப்பட்டி போலீசார், பையை தவறவிட்ட மரவியாபாரி சுகுமாரை அழைத்துக்கொண்டு கெஜ்ஜல்நாய்க்கன்பட்டி சென்றனர்.

எதிர்பாராத விதமாக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் வயதான தம்பதியினர் தவற விட்ட பையை அவ்வழியாகச் சென்ற சலவை தொழிலாளியான ரமேஷ் (45), எடுத்து பார்த்து இது யாரோ தவறவிட்ட நகை, பணம் என அறிந்து அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தை அணுகியது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் அந்த நகை மற்றும் பணம் அடங்கிய பை சுகுமாருடையது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் காவல் துறையினரின் முன்னிலையில், ரமேஷ், உரியவரிடம் ஒப்படைத்தார். தாங்கள் தவறவிட்ட பணமும், நகையும் திரும்ப கிடைத்ததால் அந்த வயதான தம்பதியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்த ரமேஷ் அவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் அவர்களை நேரில் வரவழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவித்து பாராட்டினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)