எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக சென்னை உள்துறை செயலாளரிடம் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்க சென்னை வந்தார்.
அப்போது, செங்கல்பட்டு எஸ்.பி., டி.கண்ணன், தனது அதிரடிப்படை வாகனத்துடன் சென்று போலீஸ் காரில் வந்த பெண் அதிகாரியை தடுத்துநிறுத்தினார்.
அப்போது, தனது கீழ்உள்ள அதிகாரிகள் மூலம், அந்த பெண் அதிகாரிகயின் கார் சாவியை அகற்றுமாறு கூறினார். அதற்கு அந்த பெண் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தபோது,
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக புகார் கொடுக்க கூடாது என்று மிரட்டும் தொணியில் எஸ்.பி. கண்ணன் கூறியுள்ளார். அதனை ஏற்க அந்த பெண் அதிகாரி மறுத்தபோது, புகார் அளிப்பதற்கு முன்பாக ஒருமுறை ராஜேஷ் தாஸுடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்றும் கண்ணன் வலியுறுத்தினார்.
அதனையும் மறுத்த அந்த பெண் அதிகாரி, புகார் கொடுக்க விடாமல் தடுக்கிறார் என்று கண்ணன் மீதும் புகார் கொடுப்பேன் என்று கூறியவுடன், வாகன சாவியை ஒப்படைத்துவிட்டு, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
ராஜேஷ் தாஸின் பாலியல் தொந்தரவைவிட, அவருக்கு கூலிப்படை போல செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை வழிமறித்து மிரட்டிய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
ராஜேஷ்்தாஸுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு ஆதரவாக நிற்காமல், அவரையே மிரட்டி பணிய வைக்க முயன்ற டிஐஜி ஜெய்ராம், செங்கல்பட்டு எஸ்.பி. டி.கண்ணன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
அந்த பெண் எஸ்பி தனது புகாரிலும் இதுகுறித்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அந்த எஸ்பி மற்றும் ஐஜியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.