ஹெல்மெட் இரண்டாக பிளந்து போலீஸ் மரணம் ... திருமணமான 20 நாள்களில் பரிதாபம்!


 திருச்சி அருகே திருமணமான 20 நாள்களில் சாலை விபத்தில் போலீஸ் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் தன் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

லால்குடி சாலையில் தாளக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்ற போது மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. 

ரஞ்சித்குமார் பிரேக் அடிக்க முயன்றும் பலன் இல்லை. இரு சக்கர வாகனம் மினி வேன் மீது மோதி வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் மினி வேனும் கவிழ்ந்தது. இதில், துாக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் இரும்பு கம்பு ஒன்றில் மோதியுள்ளார்.

அப்போது, ரஞ்சித்குமார் அணிந்திருந்த ஹெல்மெட் இரண்டாக பிளந்து போனது. இதனால், ரஞ்சித்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக , மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலியே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுு குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காவலர் ரஞ்சித்குமாருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமாப்பிள்ளையான ரஞ்சித் குமாரின் மரணம் போலீஸாரிடத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.