ஆந்திராவில் அடையாளம் தெரியாதவரின் உடலை 2 கிமீ தூக்கிச்சென்ற பெண் காவலர்; குவியும் பாராட்டு

 


ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாச மண்டலம், காசிபுக்கு நகராட்சிக்கு உட்பட்ட அடவி கொத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த காசிபுக்கு காவல் நிலைய பெண் எஸ்.ஐ. சிரிஷா சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை அங்குள்ள பொதுமக்கள் மூலம் மீட்டு இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை,

இதனால் எஸ்.ஐ.சிரிஷா உதவிக்கு வந்த சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரச்சரில் வைத்து தனது தோளில் சுமந்தபடி  இரண்டு கிலோமீட்டர் அடையாளம் தெரியாத சடலத்தை ஊருக்கு வெளியே கொண்டு வந்தார். பின்னர் லலிதா தன்னார்வ அமைப்பின் மூலம் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் டிஜிபி கெளதம் சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.