சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வருகிற 15ந்தேதிக்கு பிறகு கட்டாயம் அமல்படுத்தப்படும்: அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்
பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விலக்கு அளிக்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் பேசிய அவர், சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பிப்ரவரி 15 பிறகு கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றார்.
2020 டிசம்பர் வரை பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் செலுத்தும் முறை 73 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும், மாதம் 2 ஆயிரத்து 088 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக வசூல் ஆவதாகவும் கூறியுள்ளார்.