விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.1.25 லட்சம் லஞ்சம்: கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்பட 2 பேர் கைது

 


பொள்ளாச்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட துணைப் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து உள்ளனர்.

பொள்ளாச்சி தளவாய் பாளைய கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற 17 பேரின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் செல்வராஜா லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

தலைமை கூட்டுறவு சங்க செயலாளர் சிவாஜி கொடுத்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் துணைப் பதிவாளர் செல்வராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆனைமலை கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்து உள்ளனர். 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா