சசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது

 


பெங்களூர் சிறையில் இருந்து இன்னும் ஒரு வாரத்தில் (வருகிற 27-ந்தேதி) விடுதலையாகும் சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படுகிறது. ஜெயலலிதா இருந்த வரையில் அங்கேயே தங்கி இருந்த சசிகலாவால் தற்போது அங்கு சென்று குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரில் உள்ள இடத்தில் சசிகலாவுக்காக புதிய பங்களாவை கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன.

13 கிரவுண்ட் கொண்ட இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் சசிகலாவுக்காக அந்த பங்களா கட்டப்பட்டது. வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நோட்டீஸ் ஒட்டினர். இருப்பினும் பணிகள் தடைபடவில்லை.

வருமான வரியால் முடக்கப்பட்ட சொத்தின் சட்ட ரீதியான முடக்கம் முடிவுக்கு வரும் வரையில் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் புதிய பங்களா கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

சிறையில் இருந்து வருகிற 27-ந் தேதி விடுதலையான பின்னர் சசிகலா அங்கேயே தங்கும் வகையில் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் சசிகலா தற்காலிகமாக உறவினரான கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 27-ந் தேதி காலையில் விடுதலை செய்யப்பட்டால் அன்றைய தினமே சசிகலா சென்னை திரும்புவார் என்றும், விடுதலையில் தாமதம் ஏற்பட்டால், 27-ந் தேதி இரவு தங்கிவிட்டு மறுநாள் சென்னை வருவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

தி.நகரில் கிருஷ்ணப்ரியா வீடு அருகே சசிகலா தங்குவதற்கு தனி வீடு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவை வரவேற்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை போன்று, அவரை தங்க வைப்பதற்கான இடங்களையும் அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக ஏற்பாடு செய்துள்ளனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்