போதைபொருளுடன் பிரபல நடிகை கைது... சினிமாத்துறையினர் அதிர்ச்சி
நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்திய போது பிரபல நடிகையிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் திரையுல பிரபலங்கள் பலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக பாலிவுட் திரைபிரபலங்கள் பலர் போதைப்பொருள் மாஃபியா உடன் தொடர்பில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி வந்தது.
இதை தொடர்ந்து நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி நடிகை சக்கரவர்த்தியிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தனர். கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் பயன்படுத்தும் விவகாரத்தில் நடிகைகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தெலுங்கு நடிகை ஸ்வேதா குமாரி தற்போது போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார். மும்பை போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது அவர் சிக்கினார். ஸ்வேதாவிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் இவர் தொடர்பில் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்வேதா குமாரி சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரிங் மாஸ்டர் என்ற கன்னட படத்திலும் நடித்து இருக்கிறார்.