திங்களன்று பதவியேற்கிறார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜியைச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
வரும் திங்கட்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜிக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.