இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: கத்திக்குத்தில் ஆண் உயிரிழப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் தம்மிடம் தவறாக நடக்க முயன்ற உறவினரை பெண் ஒருவர் கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி(19). இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரை விட்டு சற்று தொலைவிற்கு சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவரது உறவினரான அஜித்குமார்(25) கௌதமியை பின் தொடர்ந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்குமாரிடம் கத்தியை பிடுங்கிய கௌதமி, அஜித்குமாரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்த கெளதமி நடந்தவற்றை கூறியிருக்கிறார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண் அடைந்த கெளதமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)