நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி!!

 


சென்னை : துக்ளக் விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார். துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, நீதிபதிகளின் நியமனத்தை விமர்சித்திருந்தார். அதாவது, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்காக அரசியல்வாதிகள் ஆதரவை தேடுகிறார்கள் என்று கூறியிருந்தார். நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் விமர்சனம் சர்ச்சையை கிளப்பியது.நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குருமூர்த்தி பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனக்குரல் எழுப்பின.இந்த நிலையில், நீதிபதிகள் குறித்து பேசியதற்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.‘நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தோர் என கூறுவதற்கு பதில், நீதிபதிகள் என்று குறிப்பிட்டு விட்டேன். நீதித்துறை, நீதிபதிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்’ என்று குருமூர்த்தி விளக்கம் அளித்திருக்கிறார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!