டெல்லி நிர்பயா சம்பவம் போன்ற மற்றொரு பயங்கரம்: பெண் பலாத்காரம் செய்து கொடூர கொலை: உபியில் அட்டூழியம்; பூசாரி தப்பி ஓட்டம்

 


டெல்லியில் நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தை போன்று, உத்தரப்பிரதேசத்தில் 50 வயது பெண் 3 பேர் கும்பலால் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான கோயில் பூசாரி தலைமறைவாகி விட்டார். 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசி எறியப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. ஆனாலும், டெல்லி நிர்பயா சம்பவத்தை போன்ற கொடூரங்கள் அதன் பிறகும் அவ்வப்போது அரங்கேறத்தான் செய்கின்றன. தற்போது உத்தரப்பிரதேசத்தில் கொடூர பலாத்கார கொலை சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாடவுன் அருகே உகாய்தி கிராமத்தை சேர்ந்தவர் அங்கன்வாடி பெண் ஊழியர்(50), கடந்த ஞாயிறு அன்று மாலை கோயிலுக்கு சென்றுள்ளார்.

நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கோயிலுக்கு சென்ற அந்த பெண்ணை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளது. காட்டுப்பகுதிக்கு சென்று அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் அவரை கொடூரமாக தாக்கிவிட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்த நிலையில் சடலத்தை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

காணாமல் சென்றவரை பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் அருகே பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் 18 மணி நேரம் கழித்து திங்களன்று காலை தான் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று பெறப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் பெண்ணை கடுமையாக தாக்கியதில் அவரது விலா எலும்புகள், நுரையீரல், பிறப்புறுப்பு சேதடைந்துள்ளது.  இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரை அடுத்து முக்கிய குற்றவாளியான கோயில் பூசாரி, டிரைவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பூசாரி தலைமறைவாகி விட்டார். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் 4 தனிப்படை அமைத்து பூசாரியை தேடி வருகின்றனர்.

கிணற்றில் விழுந்ததாக நாடகம்

பலாத்காரம் செய்ததால் இறந்த பெண்ணின் சடலத்தை, கோயில் பூசாரி உட்பட 3 பேரும் அவரது வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர். வீட்டருகே சடலத்தை போட்டு விட்டு, அவர் கிணற்றில் சடலமாக கிடந்ததாக நாடகமாடி உள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் விசாரிப்பதற்குள் மூவரும் தலைமறைவாகினர். இதில் 2 பேரை மட்டும் போலீசார் பிடித்துள்ளனர்.
Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image