சசிகலா வெளியே வருவது அதிமுகவுக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்

 


சசிகலா வெளியே வந்தால் அதிமுகவுக்கு ஆபத்து எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், அவர் வெளியே வந்தவுடனே அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பாதரையில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், நூல் விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க அரசு மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

விவசாயிகள் பிரச்சனையும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ஸ்டாலின், வேளாண் சட்டங்களை பெரும்பான்மையான மாநிலங்கள் எதிர்க்கும் போது, அதிமுக மட்டும் ஆதரவு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சசிகலா வெளியே வருவது அதிமுகவுக்கு ஆபத்து என்றார்.

சசிகலா வெளியே வந்தவுடனேயே அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதால், திமுகவுக்கான வெற்றி இப்போதே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்