தெலங்கானா பாஜக எம்எல்ஏ.வுக்கு ஓராண்டு சிறை தண்டனை

 


தெலங்கானா மாநிலம், கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங். கடந்த 2015 டிசம்பரில் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் விழாவுக்கு மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜாசிங் தனது ஆதரவாளர்களுடன் அங்கு செல்ல முயன்றார்.

இதையடுத்து தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய முயன்றதாக ராஜாசிங்கை போலீஸார் கைது செய்தனர். அவரை செகந்திரபாத்தில் உள்ளபொல்லாரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களைசந்திக்க அனுமதிக்காததால் போலீஸாரை ராஜாசிங் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு ஹைதராபாத் நாம்பல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் ராஜா சிங்குக்கு நேற்று ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. என்றாலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேல்முறையீடு செய்வதற்காக மார்ச் 1-ம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நாம்பல்லி பகுதியில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முதல் நபர் ராஜா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)