வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்...

 


உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் விவசாயிகள் போராட்டம் மாற்றமில்லாமல் தொடர்கிறது. இன்று வேளாண் சட்டங்களை எரித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 

டெல்லியின் எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 49வது நாளை எட்டியுள்ளது.

போகிப் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை மூன்று மணிக்கு வேளாண் கருப்பு சட்டங்களையும் எரித்து போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

டெல்லியில் போராட்டம் நடக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் சட்டங்களை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி உள்ளனர்.

அதேபோன்று பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய கிராமங்களில் இந்த சட்டங்களை எரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இன்று விவசாய சங்கங்கள் தொடர் ஆலோசனைகளை நடத்த உள்ளனர்.

சட்டங்களை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, கருத்துக் கேட்புக் குழு அமைத்துள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்துள்ள 15ஆம் தேதி பேச்சுவார்த்தையை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பாக மத்திய அரசும் இன்று ஆலோசனை நடத்துகிறது.

விவசாயிகள் அறிவித்துள்ள குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு தடைகோரி மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு வேளாண் சட்ட வழக்கோடு இணைக்கப்பட்டு 18 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, தீர்ப்புக்குப் பின் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆராய வாய்ப்புள்ளது. இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகலை விவசாயிகள் பொதுமக்கள் தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image