தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்கள் இன்று முதல் முழுஅளவில் இயங்கும்

 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று முதல் முழு அளவில் செயல்படத் தொடங்குகின்றன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நோய்த்தொற்றுப் பரவல் தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த நிர்வாகக் குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, நீதித் துறை நடுவர் மன்றம்,உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவை முழு அளவில் இன்று முதல் இயங்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.