"ஐயா என் கிணத்த காணல ‘ என குமரியில் கிணறு மாயம் : நடந்தது என்ன?

 


டிகர் வடிவேலு, திரைப்படத்தில் கிணத்தை காணல என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சி போல, ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள மொட்டவிளை என்ற பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர், தனது கிணத்தை காணவில்லை என இரணியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

செல்லத்துரையின் புகார் குறித்து விளக்கம் அளித்த குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ ,கட்டியமாங்கோடு ஊராட்சிக்கு சொந்தமான கிணறு, தனி நபர் ஒருவரால், மண் நிரப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறிய ஜெயஸ்ரீ , விசாரணைக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.