இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை
சசிகலா வரும் 27-ஆம் தேதி விடுதலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில், சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தேர்தல் ஆணைய விதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும், இருமுறை செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சுமார் மூவாயிரம் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சுமார் மூவாயிரம் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக முதலமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், கூட்டணி குறித்து முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.ட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக முதலமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், கூட்டணி குறித்து முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மருத்துவ படிப்பில் 7 .5 விழுக்காடு முன்னுரிமை, பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரருக்கு 2500 ரூபாய் வழங்கியதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும்,
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்து வி.கே.சசிகலா வரும் 27-ஆம் தேதி விடுதலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.