பழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

 


தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவையில்லாத பழைய பொருட்களை பொதுமக்கள் சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். குறிப்பாக சென்னையின் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் தேவையில்லாத பழைய பொருட்களை தீ வைத்து எரித்ததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. சாலையில் பழைய பொருட்களை எரித்து சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது எனவும், அவற்றை மறு சுழற்சிக்கு தர வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பழைய பொருட்களை பொதுமக்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று காலை சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் சுவாச பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த புகையால் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)