கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

 


சென்னையில் கொரோனா தடுப்பூசி உள்ள சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், ஆட்சியர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது, இரண்டாவது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.