சென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது

 


சென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். 

செனாய் நகரைச் சேர்ந்த ஜான் பாஷா என்பவர், 15 வயதான அச்சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, வீட்டிற்கு வரும்போதெல்லாம் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பொங்கலன்று மருந்தகம் சென்று வருவதாக வீட்டை விட்டு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பாததால், புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார்  விசாரணை மேற்கொண்டனர்.  அந்த சிறுமி மதுரவாயலில் உள்ள ஜான் பாஷாவின் அலுவலகத்தில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, போலீசார் அவரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்