“என் உடலுறுப்புகளை விற்று மின் கட்டணம் செலுத்திடுங்கள்” - மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை!

 


புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மானிய மின்சார திட்டத்தை ஒழிக்கும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதையும் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இப்படி இருக்கையில், மத்திய பிரதேசத்தில் மின் கட்டணம் அதிகமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொல செய்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மனேந்திரா. இவர் ஒரு சிறிய மாவு மில் ஒன்றும் நடத்தி வந்திருக்கிறார். மாதத்துக்கு சராசரியாக நான்காயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று 88 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு மின்சார வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பலமுறை மின்சார வாரியத்தை நாடியும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

ஆனால், அவருடைய மாவு அரவை மில் மற்றும் மோட்டார் பைக்கை மின்சார வாரியம் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே விவசாயம் பொய்த்த நிலையில் அரவைமில் வருமானமும் தடைபட்டதால் மனமுடைந்த அவர் பிரதமருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு நேற்று

தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில் தனது கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளை விற்று 88 ரூபாய் மின் கட்டணத்தை அரசுக்குச் செலுத்தி விடுமாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயின் இந்த தற்கொலை பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்