தரமற்ற தங்க நாணயம் பரிசா? அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை

 


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பார்வையிட்டுச் சென்றார். தங்க நாணயங்கள், செல்போன், கார் என பல பரிசுகளும் வழங்கப்பட்டன. 

அலங்காநல்லூர் குறவன் குளம் பகுதியைச் சார்ந்த 24 வயதான விஜயன், எட்டு மாடுகளைப் பிடித்ததற்காக 4 தங்க நாணயங்கள் மற்றும் பல பரிசுகைள வென்றார். இந்த நிலையில் அவரது தந்தை கணேசமூர்த்தி, தங்க நாணயங்களின் மதிப்பை அறிவதற்காக நகைக் கடை சென்றதாகவும். அங்கு பரிசோதித்தில் நாணயத்தின் தரம் குறைவாக இருந்ததாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.


இந்த செய்தி குறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் துணைத் தலைவர் கூறுகையில், பரிசுகள் வழங்குவோருக்கும் விழாக் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கியுள்ளார்.
புகாரளித்ததாக் கூறப்பட்ட விஜயனின் தந்தை கணேசமூர்த்தியை சந்தித்து நமது செய்தியாளர் கேட்டபோது, வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து மாடுகளைப் பிடிக்கும்போது அதற்கேற்ற மதிப்பு மிக்க பரிசுகளை அளித்தால் பாராட்டும்படியாக இருக்கும் என்று விளக்கம் அளித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தரம் குறைவான தங்க நாணயங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், புகாரளித்தவரே அதை மறுத்துள்ளார். இதையடுத்து இதுதொடர்பான சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்