ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸ் பலி

 


ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டின் போர்ட்டோ என்ற நகரத்தின் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் சோனியா அசிவிடோ. கடந்த இரு தினங்களுக்கு முன் இவருக்கு ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதன் பின் எந்த பக்கவிளைவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் எந்த அறிகுறியும், பாதிப்பும் இல்லாமல் இருந்த நிலையில் சோனியா நேற்று திடீரென உயிரிழந்தார்.

இது ஃபைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சோனியாவின் உயிரிழப்பு குறித்த சந்தேகங்களுக்குப் பின்னர் விரிவான விசாரணை நடத்த அந்நாட்டு புற்றுநோய் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.