ரயில் நிலைய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றாத ரயில்வே நிர்வாகம்!

 



காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பல மாதங்களுக்கு முன்பே 100அடி உயரம் கொண்ட தேசியக்கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கம்பத்தை அமைத்த ஒப்பந்ததாரர் ரயில்வே துறையின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக நூறடி கம்பத்தில் சுயமாக தேசியக் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது. ரயில்வே துறையின் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் எவ்வாறு ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக கொடி ஏற்றினார் என்று சர்ச்சை எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது காஞ்சிபுரம் அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ரயில்வே நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் உடனடியாக தாமாக முன்வந்து தான் ஏற்றிய தேசியக்கொடியை இறக்கி உள்ளார்.இந்நிலையில் இன்று குடியரசுதின நாளான இன்று கூட 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றாமல் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டி உள்ளது.

இந்நிலையில் நாளை ரயில்வே துறையை சார்ந்த உயரதிகாரிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை தர இருக்கிறார்கள் அப்போது 100 அடி உயரம் கொண்ட புதிதாக அமைக்கப்பட்ட இந்த கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என தற்போது காஞ்சிபுரம் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் நிலையங்களில் தேசியக் கொடியை பொருத்தமான இடத்தில் நிறுவ வேண்டும், விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தேசியக் கொடியின் பாதுகாப்பினை உறுதி செய்வது ரயில்வே பாதுகாப்பு படையினரின் பணி என்று ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டு இருந்தது. இருப்பினும் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மிகவும் அலட்சியமாக ரயில்வே நிர்வாகம் நடந்து கொண்டது விதிமீறல் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)