ரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்


 ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி முறைகேட்டிற்கு பார்க் தலைமை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததற்கான ஆதாரத்தை மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பார்வையாளர்களை கணக்கிடும் டி.ஆர்.பி. நடைமுறையில் ரிபப்ளிக் உள்ளிட்ட சில தொலைக்காட்சிகள் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அந்த ஊழலுக்கு டி.ஆர்.பி.யை கணக்கிடும் பார்க் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானியும், பார்க் முன்னாள் தலைமை அதிகாரி ராம்கரியாயும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 3,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மும்பை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.அதில் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமியுக்கும், பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையேயான வாட்ஸ்ஆப் உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன.

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.யை உயர்த்துவதற்கு தாஸ்குப்தா, அர்னாப் கோஸ்வாமிக்கு ஆலோசனை வழங்கியிருப்பது அம்பலமாகி உள்ளது.எந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும். எந்தெந்த பகுதிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தாஸ்குப்தா யோசனை தெரிவித்துள்ளார்.


பார்வையாளர் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட வீட்டினருக்கு பணம் கொடுத்து ரிபப்ளிக் சேனலை மட்டும் ஓட வைத்து. புள்ளிகளை அதிகரித்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியதும் வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மற்றொரு வாட்ஸ் ஆப் சேட்டிங்கில், மேற்கு வங்கத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சி பெரும்பாலான இடங்களில் ஒளிபரப்பு ஆவதற்கு ஆளுங்கட்சி தடையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மற்ற தொலைக்காட்சிகளின் ரேட்டிங் உள்ளிட்ட தகவல்களையும் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு பார்க் அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். ரிபப்ளிக் தொலைக்காட்சி எந்தெந்த மாநிலங்களில் குறைவான பார்வையாளர்களை கொண்டுள்ளது என்கிற தகவலையும் அதனை உயர்த்துவதற்கு தேவையான நுணுக்கங்களையும் பயிற்றுவித்து உள்ளார்.

சென்னையை தவிர மற்ற நகரங்களில் ரிபப்ளிக் தொலைக்காட்சி பெரியளவில் பார்வையாளர்களை கொண்டிருக்கவில்லை எனவும் அதனால் சென்னையை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும்படி அர்னாப் கோஸ்வாமிக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)