தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழ் பெயர்ப் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜ்


 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான தமிழ் பெயர்ப் பலகையை, கன்னட சலுவாலியா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் அடித்து உடைத்து சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தாளவாடி மலைப்பகுதியில் ராமாபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழ்நாடு மாநில எல்லை முடிவு என எழுதப்பட்டிருந்தது.


இதில் கன்னட மொழி இடம்பெறவில்லை எனக் கூறி அந்த பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கிய வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.