பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : 3 பேரையும் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

 


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2019ஆம் ஆண்டு மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.


விசாரணையில், மாணவிகள், திருமணமாக பெண்கள் என ஏராளமான பெண்களை ஆசைவார்த்தைக் கூறி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.


இதில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2019 பிப்ரவரியில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.


2 ஆண்டுகளுக்கு பிறகு, அதிமுக பிரமுகர் அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.