ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமும், நினைவில்லம் அமைக்க அனுமதி வழங்கியது.
இதனையடுத்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், வரும் 28-ந்தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
வேதா இல்லத்தில் ஜெயலலிதா விரும்பி படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.