அனைத்து அமைச்சர்களுடன் 22-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22ஆம் தேதி, அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், வருகிற 22ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

முதலமைச்சரின் டெல்லி பயணம், சட்டப்பேரவை கூட்டத்தொடர், இடைக்கால பட்ஜெட், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.