சென்னை காமதேனு அங்காடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : கணக்கில் வராத ரூ.2,14,235 ரொக்கப்பணம் பறிமுதல்

 


சென்னை காமதேனு அங்காடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

காமதேனு அங்காடியில் காய்கறி, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் 10 சதவீத குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையில் முறைகேடு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று மாலை முதல் நடந்த சோதனையில் திருவல்லிகேணி அங்காடியில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், தாம்பரம் மற்றும் பெரியார் நகரில் உள்ள காமதேனு அங்காடிகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து 54 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக  லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்