தமிழக சிறைகளில் 2020ல் 70 கைதிகள் உயிரிழப்பு


 தமிழகத்தில் சென்ைன புழல், திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை, மதுரை உள்ளிட்ட 9 மத்திய சிறைச்சாலைகள், பெண்களுக்காக 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறை, 88 ஆண்களுக்கான கிளைச்சிறை, 8 பெண்களுக்கான கிளைச்சிறை, 2 ஆண்களுக்கான தனி கிளைச்சிறை, 12 சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, 3 திறந்த வெளிச்சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆஸ்துமா, மூச்சு திணறல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகளால் மருத்துவமனைகளில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தமிழக சிறைகளில் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு மட்டும் 70 கைதிகள் இறந்துள்ளனர்.

வேலூர் மத்திய சிறையில் மட்டும் கடந்தாண்டு 8 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது குளிர்காலம் என்பதால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் கைதிகளுக்கு போதிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்