டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி நியமன ஆணை தயாரித்து 2 கோடி மோசடி.. தலைமை செயலக பணியாளர் உட்பட 2 பேர் கைது..



கையில் பணம், உடனே அரசு வேலை என்று நாடகமாடி கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு போலி பணிநியமன ஆணையை வழங்கியுள்ளார் தொழிலாளர் நலத்துறையைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர். போலி பணி நியமன ஆணை விவகாரத்தின் பின்னணி என்ன?

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. செம்பியத்தைச் சேர்ந்தவர் சஹீரா. இருவரும் தங்களுக்கு வருவாய்த் துறையில், இளநிலை உதவியாளர் பதவி நியனம் கிடைத்திருப்பதாக, டிஎன்பிஎஸ்சி துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். விசாரணையில் அவர்கள் காட்டிய ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவில் உள்ள மரபு சாரா குற்றப் பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 55 வயதான நாகேந்திரராவ் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 43 வயதான ஞானசேகர் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தொழில் துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார் ஞானசேகர். இருவரும் கூட்டு சேர்ந்து, 45 பேருக்கு போலி பணி நியமன ஆணை தயாரித்துக் கொடுத்துள்ளனர். 

ஒவ்வொருவரிடமும் தலா 6 லட்சம் ரூபாய் வீதம் 2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கு அரசு உயர் அதிகாரிகள் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கண்டுபிடிக்க காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்