103 கிலோ தங்கம் திருட்டுப்போன நிறுவனத்தில் சிபிசிஐடி போலீஸ் டி.ஜி.பி. நேரில் விசாரணை

 


சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, அந்த நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ.அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.


அந்த லாக்கரின் சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகி விட்டது.


இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், சத்தியசீலன் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி விட்டனர்.


லாக்கரில் வைக்கப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு, ராமசுப்பிரமணியன் என்ற பொறுப்பு அதிகாரியை நியமித்தது.அவர்தான் தங்கம் காணாமல் போனதை கண்டுபிடித்தார். தற்போது அவர் கொடுத்த புகார் அடிப்படையில்தான் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தங்கம் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் தங்கம் திருட்டு போன நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.தனிப்படை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தங்கம் திடுட்டு போன குறிப்பிட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தினார்.திருட்டு போன தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் கள்ள ச்சாவி மூலம் திறக்கப்பட்டதா? அல்லது லாக்கர் உடைக்கப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.


சி.பி.சி.ஐ.டி.போலீஸ் டி.ஜி.பி.பிரதீப் வி பிலீப், ஐ.ஜி.சங்கர் ஆகியோர் நேற்று தங்கம் திருட்டு போன நிறுவனத்தில் நேரடியாக விசாரணை நடத்தினார்கள்.


குறிப்பிட்ட நிறுவனத்தில், தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்ட மிட்டுள்ளனர்.கள்ளச்சாவி மூலம் தங்கம் திருட்டு போனதா? என்பது பற்றி அவர்கள் விசாரணை நட



த்த உள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)