ஓசூரில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவத்தில் பீகார் மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு? 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை


 சூர் முத்தூட் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனதாக கூறப்படும் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று பட்டப்பகலில் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ஊழியர்களை மடக்கி, கை, கால்களை கட்டிவைத்ததுடன், வாயில் டேப்பையும் ஒட்டியுள்ளது.

பின்னர் ஊழியர்களை மிரட்டி, நகைப்பெட்டகத்தின் சாவியைப் பெற்று சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளையும் 96 லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

நகைகள் வைக்கப்பட்டிருந்த காலிப் பெட்டிகள், சிறு சிறு பைகள் உள்ளிட்டவை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி - ஆனேக்கல் சாலையில் கண்டெடுக்கப்பட்டன. 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறறு வரும் நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் பீகார் மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா