கொரோனா பரவல் ஆபத்து : டெல்லியில் போராடும் விவசாயிகளை வெளியேற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லியில் போராடும் விவசாயிகளால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவர்களை வெளியேற்ற உத்தரவிடும்படி கோரி ரிஷப் சர்மா என்ற மாணவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


 


விவசாயிகளால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளதால், அவர்களின் போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.


 


போராட்டம் நடைபெறும் இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றுவது, முககவசம் அணிவது போன்ற தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.