சேலத்தில் சாலை விதிகளை மீறுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வழக்குப் பதிவு செய்யும் முறை அறிமுகம்

சேலத்தில், சாலை விதிகளை மீறுவோரின் வாகன எண்களைத் துல்லியமாகப் படம் பிடித்து அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.


 


தலைக்கவசம் அல்லது சீட் பெல்ட் அணியாமலும், சிக்னலை மதிக்காமலும் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க, ஐந்து ரோடு மற்றும் ஈரடுக்கு மேம்பாலத்தில், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 12 தானியங்கி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


 


இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோரின் வாகன எண்கள் படம் பிடிக்கப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.


 


அங்கிருந்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன்களுக்கு அபராதத் தொகை குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். அபராதத்தை வாகன ஓட்டிகள் ஆன்லைனில் செலுத்தலாம் என சேலம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா