தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று இடியுடன்கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.


 


மன்னார் வளைகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.


 


சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.