மதத்தாலும், ஜாதியாலும், பொதுமக்களை பிளவுபடுத்த நினைப்பவர்களின் எண்ணம் தமிழ்நாட்டில், ஒருபோதும் ஈடேறாது-மு.க. ஸ்டாலின்


மதத்தாலும், ஜாதியாலும், பொதுமக்களை பிளவுபடுத்த நினைப்பவர்களின் எண்ணம் தமிழ்நாட்டில், ஒருபோதும் ஈடேறாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை சந்தோமில், நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மும்மத தலைவர்கள் பங்கேற்று, மு.க. ஸ்டாலினுக்கு கிரீடம் அணிவித்து, செங்கோல் வழங்கினர். விழாவில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின்,தமிழ்ச்சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

விழாவில் தமிழக அரசின் தலைமை ஹாஜி குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், தமிழ் சைவ பேரவை தலைவர் கலையரசி நடராசன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா