வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த தயார் - விவசாய சங்கங்கள்

 


வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக 40 விவசாய அமைப்புகள் இணைந்த கூட்டு அமைப்பான, சன்யுக்த் கிசான் மோர்ச்சாவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய வேளாண்துறை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு, விவசாய சங்க பிரதிநிதிகள் அனுப்பிய கடிதத்தில், மத்திய அரசு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தையை 29ம் தேதி காலை 11 மணிக்கு நடத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.