ஏ.ஆர். ரகுமான் தாயார் கரீமா பேகம் காலமானார்..!


 பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார்.

72 வயதான அவர், கடந்த 7 ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11:30 மணியளவில் உயிர் பிரிந்தது.

தகவலின்பேரில் திரைப்பட இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஜெ சூர்யா, அட்லீ ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கரீமா பேகத்தின் உடல், சென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டைக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.