நுகர்வோரே தட்டி கேட்க தயக்கம் ஏன்?

 


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் விற்பனை. ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள்? என அப்போது கேட்டு விட முடியாது. 

அப்படி நீங்கள் கேட்டால் அவ்வளவு தான். அங்கே சுற்றி நிற்பவர்களும், திரையரங்கு உரிமையாளர் நம்மை ஏளனமாக ஒரு பார்வை பார்ப்பர். என்ன சார், எல்லோரும் வாங்கிட்டு போகிறார்களே, - உங்களுக்கு மட்டும் என்ன கேடு? என அலட்சியமாக கேள்வி எழுப்புவர். ஏன் இந்த நிலை என எண்ணி பார்த்தோமா? எப்படி நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டோம் என இனி பார்க்கலாம். 

சமீப காலங்களில் நாகர்வோரின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு வந்தாலும் நுகர்வோர் விழிப்புணர்வு இந்தியாவில் குறைவு எனலாம். படித்தவர்களுக்கும் கூட போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் பலர் நமக்கு எதற்கு இந்த வம்பு என்ற மனப்பான்மையுடன் ஒதுங்கி விடுகின்றனர். சிலர் கவுரவம் கருதியும் உரிமைகளை கேட்க தயங்குவது கண்கூடாக காணலாம். இந்த நிலையினால் தலயினால் திரையாங்குகளில் டிக்கெட் வாங்குவோரும் நுகர்வோர் என்பதை மறந்து ஏமாற்றப்படுகிறார்கள். 

இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நுகர்வோர் தங்களுக்கு - இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பொறுத்து கொள்ள வேண்டிய அவலம் இருந்தது. ஆனால், இன்று அப்படி அல்ல. 1986ல் நுகர்வோர் பாதுகாப்பு -சமூக சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நாம் வாங்கிய பொருட்களில் கண்டிஷன்ஸ் அப்ளை என நிறுவனங்கள் அச்சிடுவதுடன் நின்று விடுகின்றார்கள். சரி, அது என்ன நிபந்தனைகள் என்பதை எந்த நிறுவனமும் சொல்வதில்லை. 

என்ன நிபந்தனை என்பதை அந்த - நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று படித்து தான் பார்க்கலாமே என இணையதளத்திற்கு நாம் சென்று பார்த்தால் நிபந்தனை பட்டியல் பத்து, பதினைந்து பக்கங்களுக்கு அதிகமாக இருக்கும். நிபந்தனைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். நுகர்வோருக்கு எளிதில் புரியாத டெக்னிக்கல் வார்த்தைகளால் எழுதப்பட்டிருக்கும். இதனால் சமானிய நுகர்வோர்களால் இந்த நிபந்தனைகளை

கோ.தேவராஜன் -சமூக ஆர்வலர்எள எளிதில் படித்து புரிந்து கொள்ள முடியாது. பத்து ரூபாய் தந்து வாங்கும் தின்பண்ட பாகம் பாக்கெட்டில் நமக்கு என்ன பாதகம் வந்து விடப்போகிறது இதற்கு ஏன்நிபந்தனை போடுகிறார்கள் என்று நினைத்து அதன் நிபந்தனைகளை படித்தால் நமக்கு பகீர் என இருக்கும். திண்டன்டங்கள் முதல் திரையரங்கு டிக்கெட் வரை உடனடியாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் நான் வாங்கும் பத்து ரூபாய பொருட்களுக்கு பல ஆயிரம் செலவு செய்து வழக்கு வழக்கு போட வேண்டுமா? என நினைத்து பலரும் சுமமா இருந்து விடுகின்றனர்.

இதனால் வணிக வளாகம் முதல் திரையரங்கு . வரை செய்யும் தவறுகள் திருத்தப்படாமல் போகிறது. நுகர்வோர் தட்டி கேட்க தயங்க கூடாது. பாதிக்கப்பட்ட நுகர்வோர் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் திங்கள் தங்கள் குறைகளை நுகர்வோர் குறைதீர் மன்றத்தினை அணுகி பரிகாரம் பெறலாம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் சட்டத்தின் முக்கிய அம்சம் புகாரை வாதாட வழக்கறிஞர் தேவையில்லை என்பது தான் முக்கிய சிவா சேவைகளில் குறைபாடு மற்றும் முறையற்ற வணிக முறைகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடலாம்.

நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்வதினால் நாமும் இழந்த நஷ்டத்தை அபராதத்துடன் பெற முடியும். இதுபோல் மற்ற நுகர்வோருக்கு நஷ்டம் நேரிடுவதை தவிர்க்கலாம். அனைவருக்கும் தரமான பொருள், சேவை அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படும். தயக்கமின்றி தட்டி கேட்போம். நுகர்வோர் உரிமைகளை பாதுகாப் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா