சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஊழியர் : கொடுக்க மறுத்த காவல் உதவி ஆய்வாளர்


சென்னை - பூந்தமல்லி அருகே மதுரவாயலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இங்குள்ள தனலட்சுமி நகர் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான செல்போன் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டவர், பூந்தமல்லி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிநாத் என்பது தெரிய வந்தது.

ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு செய்தபோது ஹரிநாத், குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர், மதுரவாயல் காவலர் குடியிருப்பு செல்போன் டவரில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.