நோ 'காவி'.. நோ 'மய்யம்'.. சம்மட்டி அடி தந்த ரஜினி.. இனி அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது!

 


சென்னை: ரஜினியை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்த மொத்த பேருக்கும் ஒரு பெரிய சம்மட்டி அடி விழுந்திருக்கிறது.. இனி அடுத்தவர்களின் பேரையும், புகழையும் தனக்கு சாதகமாக ஆட்டையபோட நினைக்கும் சொந்த கட்சியின் மீது நம்பிக்கை இல்லாத அத்தனை பேருக்கும் இது ஒரு படிப்பினையாகும்! 

ரஜினி தன் உடல் நலம் கருதி கட்சி துவக்க போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.. ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பாடுபட்டு, உழைத்து, அதற்கு பிறகுதான் ரஜினியால் தக்க வைக்க முடிந்தது. இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொள்ள, இன்னும் ஓபனாக சொல்ல போனால் ரஜினி மந்திர சொல்லை வைத்து பதவி, பணம் சம்பாதிக்க அலைந்த கூட்டங்களே அதிகம். ஒன்று கட்சிகள் ரீதியாக.. மற்றொன்று அவரை உசுப்பேத்திவிட்டு கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் லாபம் அடைய நினைத்தவர்கள்.

கட்சி ரீதியாக பார்த்தோமானால், பாஜகவைதான் முதலில் சொல்ல வேண்டி உள்ளது.. ரஜினிக்கு இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் உண்டு.. மத உணர்வுகள் மேலோங்கியிருக்கிறது.. இதைதான் பாஜக போன்ற இந்துத்துவா அமைப்புகள் பயன்படுத்தி கொள்ள முயன்றன..

தமிழகத்தில் தந்தை பெரியாரின் பார்வையை தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது.. இடஒதுக்கீடு, மூடநம்பிக்கை, பகுத்தறிவு, தாழ்த்தப்பட்ட பிறப்டுத்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள், ொழியின் மேன்மை, தொன்மை வாய்ந்த தமிழ்க்கலாச்சாரம், பண்பாட்டு பாரம்பரியம் போன்ற விஷயங்கள்தான் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கின்றன.. அந்த வகையில், இவைகளுக்கெல்லாம் ரஜினியால் ஈடுகொடுக்க முடியுமா என்ற சந்தேகம் கால் நூற்றாண்டாகவே எழுந்து வந்தது. ஆனாலும், ஏதோ ஒரு விதத்தில் ரஜினியை விரட்டி பிடித்தும் பாஜக இன்று தோற்றுள்ளது..

10 வருடத்துக்கு முன்பு வரை தமிழகத்தில் அவ்வளவாக பெயர் தெரியாத கட்சியாக இருந்த பாஜக, சொந்த முயற்சியாலும், மக்களுக்கு செய்த அர்ப்பணிப்பாலும், எண்ணற்ற சேவைகளாலும் கால் ஊன்ற முடியாமல் ரஜினியின் உதவியை நாடியதும், காவி சாயம் பூச முயற்சித்ததும் ஏற்க முடியாததே.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)